உடல் வெப்பநிலை பரிசோதனையில் இருந்து தப்பிக்க ’பாராசிட்டமல்’ மாத்திரை - மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை

இது கோவிட் -19 இன் கடுமையான விளைவுகளைத் தூண்டுவதில் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. ஒரு "பெண்களின்" ஓஸ்ட்ராடியோல் ஹார்மோன் ("Female" oestradiol hormone) வைரஸின் மோசமான தாக்கத்தை தடுக்க பெண்களுக்கு உதவக்கூடும். ஏனெனில் இது டி உயிரணுக்களின் (T cells) பதிலை அதிகரிக்கிறது. இது பாதிக்கப்பட்ட உயிரணுக்களைக் கொல்லும் - மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. "இதற்கு மாறாக, ஆண் பாலியல் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகிறது (Male sex hormone testosterone suppresses the immune system)" என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

உடல் வெப்பநிலை பரிசோதனையில் இருந்து தப்பிக்க பலரும் பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  கொரோனா பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்குச் சென்று வர இ-பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதனால் அரசு பேருந்துகள் மட்டுமின்றி கார்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. அதேநேரம், தூத்துக்குடியில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கும், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருபவர்களுக்கும் தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் உடல் வெப்பநிலை கண்டிப்பாக பரிசோதிக்கப்படுகிறது.

  அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், அந்த பயணி தனிமைப்படுத்துவதுடன் கொரோனா பரிசோதனைக்கும் அனுப்பப்படுவார்கள. அதனால் ஆரோக்கியமாக இருக்கும் பலரும், அச்சப்பட்டு, காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் பாராசிட்டமல் மாத்திரையை, பயணத்திற்கு முன்பாக தேவையின்றி எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

  குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியிலும், நெல்லை மாவட்ட எல்லையான காவல் கிணற்றிலும், சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வருபவர்களுக்கு மாசார்பட்டியிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படுகிறது.

  அதில் இருந்து தப்பிக்க பாராசிட்டமல் மாத்திரைகளை சாப்பிடுவது, கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இதுபோன்று சுய மருத்துவம் செய்து கொள்வது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி நோய் பரவலுக்கும் காரணமாகி விடும்.

  பயணங்களின்போது தேவையின்றி பாராசிட்டமல் மாத்திரையை சாப்பிடுவதை தவிர்ப்பது நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவசிமானது.

  Also read... கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக மாறியது நியூசிலாந்து


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: