• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்.. பிரதமரிடம் தகவல் தெரிவிக்க தமிழக பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி பயணம்..

தமிழக அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்.. பிரதமரிடம் தகவல் தெரிவிக்க தமிழக பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி பயணம்..

பாஜக

பாஜக

இன்று மாலை தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் டெல்லி பயணம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள்  பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசுகிறார்கள்

  • Share this:
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக பாஜக 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர்.

இதை பாஜக தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியாகவே கருதுகிறது.  தமிழகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற முடியாது தாமரை மலராது என்று சொன்னவர்களுக்கு இது கரியைப் பூசிய வெற்றி என அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவின் ஆட்சி அமைந்ததால் பாஜக குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதனால் சட்டமன்றத்தில் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுப்பதாக குற்றச்சாட்டை பாஜக முன்வைக்கிறது. எனவே நாளை பாஜக தலைவர் முருகன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்திக்கும்போது இந்த விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நீட்டுக்கு எதிராக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து நீட் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அதேபோல நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம்
ஷேல் கேஸ், ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு எதிர்ப்பு,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விரைவில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...கொரோனோ காரணமாக 1799 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த தெற்கு ரயில்வே..

குடியுரிமை சட்டம் மற்றும்புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக அடுத்த கட்டமாக தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தங்கள் செயல்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்க நாளை டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: