தபால் வாக்குப் போட்ட டீக்ககடைக்காரர்; திமுக வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓட்டு - மாதிரிப்படம்

திருவள்ளுர் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் சா.மு நாசர் குற்றச்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆவடி சாமு நாசர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது,  ஆவடி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஒரே மையமாக வேப்பம்பட்டு சாய்ராம் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகளுக்காக இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆவடி தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணும் பணிக்காக 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை.

ஆவடி தொகுதியில் அளிக்கப்பட்டுள்ள தபால் வாக்கில் அரசு ஊழியர்களை தவிர்த்து நடுக்குதகை பகுதியை சார்ந்த டீக்கடைக்காரர் வாக்களித்து உள்ளது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ள நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் வழங்கவில்லை என்றார். மேலும்,  வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன அருகாமையில் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் அடையாளம் தெரியாத சிலர் வந்து செல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: