கூடுதல் வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு... மயிலாடுதுறை அருகே 7 மணி நேரம் போராட்டம்

வாக்குப் பதிவு இயந்திரம்

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக பதிவானதாகவும், அது குறித்து முறையாக விளக்கம் அளிக்காமல் நாம் தமிழர் கட்சியினர் மீது தடியடி நடத்திதாகவும் கூறி காவல்துறையை கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டது.

 • Share this:
  மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக பதிவானதாகவும், அது குறித்து முறையாக விளக்கம் அளிக்காமல் நாம் தமிழர் கட்சியினர் மீது தடியடி நடத்திதாகவும் கூறி காவல்துறையை கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டது.

  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் 175 ஆவது வாக்குச்சாவடியில், மொத்தம் உள்ள 827 வாக்குகளில் 578 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

  ஆனால் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கணக்கிட்டு பார்க்கும் பொழுது 628 வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தனர். பதிவான மொத்த வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக இருப்பதாகக்கூறி, நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதில் நடைபெற்ற கோளாறு காரணமாக கூடுதலாக 50 வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் அளித்த விளக்கத்தை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

  அப்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் மாதிரி வாக்குப்பதிவு ஆதாரசீட்டில் கட்சிகள் வாக்களித்ததை குறைத்து கணக்கிட கோரிக்கை விடுத்தார். இதற்கு முறையாக பதிலளிக்காமல் தனது பாதுகாப்பிற்காக வந்த கட்சியினரை எந்தவித காரணமும் இன்றி எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் தாக்கியதாகவும் இதனால், 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வேட்பாளர் காளியம்மாள் குற்றம்சாட்டினார்.

  இந்நிலையில், காரணம் இன்றி காவல்துறையினர் தாக்கியதாகக் கூறியும், கூடுதலாக 50 வாக்குகள் பதிவானதற்கு விளக்கமளிக்காத தேர்தல் அதிகாரிகளை கண்டித்தும், மறுவாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் வாக்குசாவடி மையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

  அப்போது, பூம்புகார் தொகுதியல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் 100முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறற்ம்சாட்டினர்.  தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை கண்டித்து முழக்கமிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

  Must Read : உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

   

  இதனால், பேச்சுவார்த்தை நடத்திய தேர்தல் அதிகாரிகள், இவிஎம் இயந்திரம் பழுது ஏற்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவுபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன். அதனைத் தொடர்ந்து 7மணி நேரமாக நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது.

  - செய்தியாளர் : கிருஷ்ணகுமார்
  Published by:Suresh V
  First published: