ஆவின் சங்கத்தில் 460 பணியிடங்கள் முறைகேடாக நிரப்பல்? ஆதாரத்துடன் குவியும் ஆயிரக்கணக்கான புகார்கள்

மாதிரிப்படம்

ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன.

  • Share this:
ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மேலாளர் பொறுப்புகளுக்கு 40 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று பணி ஆணை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 460 பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளது என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்வளத் துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி 460 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆவின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது .

பின்னர் பணியிடம் நிரப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து முறையாக தேர்வு நடைபெறாமல் கடந்த 24.5.2021 ஆம் ஆண்டு முறைகேடாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு ஆதாரப் பூர்வத் தகவல்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார்களை அனுப்பி உள்ளனர். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன? எவ்வளவு லஞ்சம் பெறப்பட்டது என்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணி நியமன ஆணை வழங்கப்பட்டதில் யார் யாருக்கெல்லாம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதில் தொடர்பு உள்ளதா? மேலும் எப்பொழுது விசாரணை நிறைவு பெறும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Karthick S
First published: