இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழக அரசு சார்பாக முறையாக ஆய்வு செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 99வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் தமிழர்கள் புகழ்வானம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சு.வீ, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.
இதில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, பட்டதாரிகளில் 75 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். திராவிட இயக்கத்தின் உச்சமாக இதை பார்க்க முடியும். கலைஞரின் அயராத முயற்சியால் உயர்கல்வித்துறை பிரம்மாண்டமாக உயர்ந்திருக்கிறது. வருகிற இளைஞர்களை சமூக நீதி கொள்கைகளைப் பற்றியும், சமூக நீதி பரவுகிற காரணமாக இருக்கிற திராவிட இயக்கங்களை பற்றி தெரிந்து கொள்ள கலைஞர் ஆய்வு மையம் செயல்பட வேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவிகள் திராவிட இயக்கங்கள் மற்றும் சமூக நீதிக் கொள்கையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கலைஞரின் ஆய்வு மைய சடங்கிற்காக சம்பிரதாயத்திற்காக செயல்படுவதற்கல்ல. கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, கலைஞரின் தொண்டுகள், திரைப்படக் கலை தொண்டுகள், எழுத்தாளராக, அமைச்சராக, ஆட்சியாளராக அவர் செய்த அனைத்தையும் பதிவு செய்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவர், ஆணும் பெண்ணும் சமம். பெண்கல்வி முக்கியம் என்று பெரியார் சொல்லாவிட்டால் இவ்வளவு பெண்கள் இப்போது கல்வி கற்று இருக்க முடியாது. திராவிட மாடல் என்பதை கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது பெண்கள் அதிகளவில் படிக்க காரணம் தந்தை பெரியார்தான் காரணம்.
கல்விக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வரலாறு முக்கியம். எத்தனை இசம் இருந்தாலும், மானுடவியலுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டும்தான். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்பதை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தினர் என்றார்.
தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,
பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்துவிட்டது, சிபிஎஸ்சிக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை எப்பொழுது வரும் என தெரியவில்லை. அதற்காக கூடுதலாக ஐந்து நாட்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான நாட்களை நீட்டித்து உள்ளோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குறிப்பாக எல்லா பல்கலைக்கழகத்திலும் விதிமுறைகளை பின்பற்ற அரசாணை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு அனைத்து பல்கலைக்கழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பாக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாக சென்று சுப.வீரபாண்டியன் மேற்பார்வையிடுவார் என்றார்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். தனியார் நீட் பயிற்சி பள்ளிகள் பயன்பெறுவதற்காக தான், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஒருவர் நீட் பயிற்சி பள்ளி நடத்தி ஏராளமான பணம் சம்பாதித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Ponmudi, Ponmudi