தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தற்போது தளர்வில்லா
முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : ஆக்சிஜன் அளவு 90க்கு குறைவாக இருந்தால் மட்டுமே கொரோனா மருத்துவமனையில் அனுமதி - தமிழக அரசு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு
மேலும்,
மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும், இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எந்த மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்க கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது. தலைமையாசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.