இன்று கல்லறை திருநாள்: மறைந்த உறவினர்களுக்கு வேளாங்கண்ணி கல்லறையில் அஞ்சலி செலுத்தும் கிறிஸ்தவர்கள்..

இன்று கல்லறை திருநாள்: மறைந்த உறவினர்களுக்கு வேளாங்கண்ணி கல்லறையில் அஞ்சலி செலுத்தும் கிறிஸ்தவர்கள்..

கல்லறை தினம்

வேளாங்கண்ணியில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு  சிறப்பு திருப்பலி கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் நடைபெற்றது.

  • Share this:
இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாக கல்லறை திருநாளை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கப்பிடிக்கபடுவது வழக்கம். அதன்படி இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்துவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதில் நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா  பேராலயத்தில் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலய பங்குத் தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

மேலும் படிக்க...தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று'.. தனிமைப்படுத்திகொள்வதாக WHO இயக்குநர் ட்வீட்..அதனைத் தொடர்ந்து வேளாங்கன்னியில் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியால் இறந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 1000 பேர் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் கிழக்கு கடற்கரைசாலை ஆர்ச் அருகில் உள்ளது. அங்கு வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.
Published by:Vaijayanthi S
First published: