தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர், முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..

மாதிரி படம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அகந்தை எனும் இருள் அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றும் நாள் தீபாவளி என்றும், இன்பம் பெருகி நலமும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பிரிவு மக்களால் கொண்டாடப்படும் திருவிழாக்கள், இந்திய சமூகத்தின் ஒருங்கிணைந்த நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அகந்தை எனும் இருள் அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றும் நாள் தீபாவளி என்றும், இன்பம் பெருகி நலமும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட்டு நலமும், வளமும் பெற்று தீபாவளியில் ஒளிமயமான தமிழகம் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  Also read... சர்க்கரை ஆலையில் வேலையிழந்த 61 பணியாளர்களுக்கு தலா ரூ.5,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு!  தீமையை அகற்றி நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாகவே விளக்கேற்றி வைக்கும் ஒளித்திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் எனவும், ஒளிமயமான தமிழகம் அமைய தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீப ஒளி திருநாள் மத்தாப்புகளால் ஏற்படுத்தப்படும் வண்ணங்களையும், ஒளிகளையும் கொண்டதாக இருக்கக் கூடாது என்றும், மக்களின் வாழ்க்கையில் இன்மையை விலக்கி, இன்பத்தை பெருக்கி வளமும், நலமும் கொண்டதாக மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: