அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

நாளையும், நாளை மறுநாளும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், துணை இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!
தலைமைச் செயலகம்
  • News18
  • Last Updated: February 22, 2019, 4:35 PM IST
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உடன் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்றன.

அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய 3 மாநிலக் கட்சிகளின் நிர்வாகிகளும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளின் நிர்வாகிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளையும், நாளை மறுநாளும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், துணை இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தல் குறித்தும், வாக்காளர் பட்டியல் குறித்தும், விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

Also see...
First published: February 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading