ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று திமுக தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம்.. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்து ஆலோசனை..

இன்று திமுக தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம்.. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்து ஆலோசனை..

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

வேளாண் திருத்த மசோதா குறித்து விவாதிப்பதற்காக, திமுக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று கூடுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

  அதன்படி, இன்று காலை 10.30 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது. நேற்று, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

  மேலும் படிக்க...சிறப்புப் பயிற்சிக்கு செல்லும்வரை ’என்.ஐ.டி இருப்பதே எனக்கு தெரியாது' - JEE தேர்வில் 88.42% பெற்ற அரசுப்பள்ளி மாணவர் மகிழ்ச்சி..

  மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு, தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழிப்பவை என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: All Party Meeting, DMK