ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“பூஸ்டர் டோஸ், மாஸ்க், 1.75 லட்சம் படுக்கைகள்.. கொரோனாவை எதிர்கொள்ள தயார்..” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“பூஸ்டர் டோஸ், மாஸ்க், 1.75 லட்சம் படுக்கைகள்.. கொரோனாவை எதிர்கொள்ள தயார்..” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் முக்கிய மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், இந்த ஒத்திகை நடைபெற்றது. டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அசாம் மாநிலம் கவுகாத்தி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகைப் பணிகள் நடைபெற்றன. உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஒத்திகையில், மருத்துவர்களிடம் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து, துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் கேட்டறிந்தார்.

உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனிலும் கொரோனா தடுப்பு ஒத்திகையில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ உள்கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்த்து 1.75 லட்சம் மொத்த படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முகக் கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதை கடைப்பிடிக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திடவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, CoronaVirus, Covid-19, Ma subramanian