உப்பு நீராக மாறிய நிலத்தடி நீர்... குடிநீர் பிடிக்க தினமும் சண்டை...! சீர்காழி பகுதி மக்களின் சோகக்கதை

குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில், குழந்தைகளை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

news18
Updated: June 14, 2019, 2:05 PM IST
உப்பு நீராக மாறிய நிலத்தடி நீர்... குடிநீர் பிடிக்க தினமும் சண்டை...! சீர்காழி பகுதி மக்களின் சோகக்கதை
தண்னீருக்காக காத்திருக்கும் மக்கள்
news18
Updated: June 14, 2019, 2:05 PM IST
தண்ணீர் பஞ்சத்தால் சீர்காழி அடுத்த கடற்கரையோர கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரையே காலி செய்து வேறு ஊருக்கு குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இந்த கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. பெருந்தோட்டம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை பிடித்து சேமித்து வைத்தால் காவிநிறத்திற்கு மாறுவதாலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாலும் அதனை பயன் படுத்தும் கிராம மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கிறார் கல்லூரி மாணவி ரேபா.

அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் போர்வெல் அமைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கி பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.



இந்த தண்ணீரை பிடிக்க கூட்டம் அலைமோதுவதால்அங்கு சண்டை ஏற்படுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது என்று வேதனையுடன் கூறுகிறார் மஞ்சுளா.

குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில், குழந்தைகளை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் பகுதிக்கு ஒரு குடிநீர் மேல்தேக்கத் தொட்டி அமைத்துத் தந்தால், தற்காலிகமாக பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.  அதேசமய கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Loading...
Also see...

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...