Home /News /tamil-nadu /

அதிமுக கூட்டணிக்கு பிரசாரம்: முடிவை மாற்றிக்கொண்ட சரத்குமார்!

அதிமுக கூட்டணிக்கு பிரசாரம்: முடிவை மாற்றிக்கொண்ட சரத்குமார்!

சரத்குமார்

சரத்குமார்

சிறுபான்மையினர் நலன், சமத்துவம் ஆகியவற்றைச் சமரசம் செய்யக்கூடாது.

  • News18
  • Last Updated :
    மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறிவந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இன்று அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

    சென்னை, கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், “துணை முதல்வரும், அமைச்சர் ஜெயகுமாரும் என்னைச் சந்தித்து தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை மாற்றி அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டனர்.

    அதன் அடிப்படையில் எங்கள் உயர்மட்டக் குழுவையும் , மாவட்ட செயலாளர்களையும் கலந்து ஆலோசித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதென்று முடிவு செய்துள்ளோம்.

    அதிமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

    தொங்கு பாராளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதால் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரிக்கிறேன். எங்கள் தேர்தல் அறிக்கையை, அதிமுகவிடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம்.

    சிறுபான்மையினர் நலன், சமத்துவம் ஆகியவற்றைச் சமரசம் செய்யக்கூடாது என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தனித்துப் போட்டி என்கிற எங்கள் நிலைப்பாட்டில் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றும் சரத்குமார் தெரிவித்தார்.

    மேலும் பார்க்க: 
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Election 2019, Lok Sabha Election 2019, Sarathkumar

    அடுத்த செய்தி