ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Kamalhaasan | மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா

Kamalhaasan | மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதயிலும் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் இறுதி சுற்று முடிவுகளில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீவாசனிடம் தோல்வியடைந்தார்.

  இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிர்வாகிகள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்வதாக துணைத் தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார். கட்சியை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டுள்ளோம். விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகினோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியல் இருந்து விலகுவதாக துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Kamalhaasan, Makkal Needhi Maiam