கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்கள் நலமுடன் உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் நலமுடன் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்கள் நலமுடன் உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
அமைச்சர் விஜய பாஸ்கர்
  • Share this:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்க இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஓரிரு நாளில் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் இன்று 13.5 கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்க்-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 400 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டுகளை பார்வையிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 400 படுக்கைகளில் இருந்து 800 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 1200 படுக்கையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்தினறல் பிரச்னை இருப்பதால் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 59 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளவை உயர்த்த 75 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் டேங்க் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் 800 லிட்டர் கேஸ் ஆக மாறி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இது போன்ற ஆக்சிஜன் டேங்குகள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.
 

Also read... தமிழக பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு - நமிதா, கவுதமிக்கு முக்கிய பதவி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்க இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஓரிரு நாளில் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் நலமுடன் உள்ளனர். அவர்களை நலம் விசாரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொடர்ந்து நலம் விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading