உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்கவேண்டும்! மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news18
Updated: November 9, 2019, 1:26 PM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்கவேண்டும்! மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மு.க.ஸ்டாலின்
news18
Updated: November 9, 2019, 1:26 PM IST
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்குச் சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் அளவில் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...