• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண் ஓதுவார் சுஹாஞ்சனா உள்ளிட்ட அர்ச்சகர்கள் கோயில்களில் பணியை தொடங்கினர்

பெண் ஓதுவார் சுஹாஞ்சனா உள்ளிட்ட அர்ச்சகர்கள் கோயில்களில் பணியை தொடங்கினர்

ஓதுவார் சுஹாஞ்சனா

ஓதுவார் சுஹாஞ்சனா

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பணி ஆணை பெற்றவர்கள், ஞாயிற்றுக்கிழமை பணியை தொடங்கினர். தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • Share this:
    கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், கோயில் அர்ச்சகர் பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதிகளை சேர்ந்த 24 அர்ச்சகர்கள், 20 ஓதுவார்கள் உட்பட 216 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட, தேரடி கருப்பணசாமி கோயிலில் அருண் என்பவர் அர்ச்சகராக பொறுப்பேற்றார். பல ஆண்டுகளுக்கு பின் பணி நியமன ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில், கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் அர்ச்சகராக பொறுப்பேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    பெண் ஓதுவாரான சுஹாஞ்சனா, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சுஹாஞ்சனா தெரிவித்தார். இதேபோல், தமிழகத்தின் பிற கோயில்களுக்கு நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: