Tamilnadu lockdown | திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்களும் மூடல்: ஏற்கெனவே மூடப்பட்ட பனியன் நிறுவன அடையாள அட்டையைக் காட்டி ஊர் சுற்றியதன் விளைவு

மாதிரிப்படம்.

திருப்பூரில் இன்று மாலை முதல் அனைத்து பனியன் நிறுவனங்களும் மூடப்படுகின்றன, இதனால் தினமும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

  • Share this:
    திருப்பூரில் இன்று மாலை முதல் அனைத்து பனியன் நிறுவனங்களும் மூடப்படுகின்றன, இதனால் தினமும் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    திருப்பூரில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளன. முழு ஊரடங்கு அமல் படுத்தினாலும் அயல்நாட்டு ஏற்றுமதி ஆர்டர்களை அனுப்ப சில பனியன் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. மற்ற நிறுவனங்கள் மூடப்பட்டன.

    எல்லா ஊர்களிலுமே காலை 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் திறக்க அனுமதியளித்தால் அது ஏதோ சுதந்திரமாக உலாவுவதற்கான அனுமதி போல் இருசக்கர வாகனங்களில் பலரும் சுற்றித்திரிகின்றனர் என்று போலீசார் கண்டித்துள்ளனர்.

    போலீசார் சோதனையின் போது பனியன் நிறுவன அடையாள அட்டையை (ஐ.டி.கார்டு) காண்பித்து சென்று வந்தனர். போலீ சாரும் பனியன் நிறுவன பணியாளர்கள் என்று நினைத்து விட்டு வந்தனர். ஆனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.

    மூடப்பட்டிருக்கும் பனியன் நிறுவன தொழி லாளர்களும் தங்களது நிறுவன ஐ.டி.கார்டுகளை பயன்படுத்தி சாலைகளில் சுற்றி திரிவது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீ சார் அதிரடி நடவடிக்கையில் களமிறங்கினர். அதன்படி பொதுமக்களிடம் இருந்து ஐ.டி. கார்டுகளை பறி முதல் செய்ததுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இதனிடையே போலீசார் சோதனை காரணமாக விலக்கு அளிக்கப்பட்ட பனியன் நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய தொழி லாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

    இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க இன்று மாலை முதல் அனைத்து பனியன் நிறுவனங்களும் மூடப்படுகின்றன. 24ம் தேதி வரை மூடப்படுகின்றன.

    திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர், இதனால் திருப்பூர் ரயில் நிலையத்திலும் கூட்டம் சேர்கிறது.
    Published by:Muthukumar
    First published: