மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று கூறமுடியாது; சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகின்றனர்: ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

மதுவுக்கு எதிராக தமிழக அரசு அதிக அளவில் பணத்தை செலவு செய்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

  • Share this:
    மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று கூறமுடியாது சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, துரதிஷ்டவசமாக மது அருந்தும் பழக்கம் நாடு முழுவதும் பரவிவிட்டது. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கல்ல. முதியவர்கள், இளைஞர்கள், ஒரு சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகிறார்கள். நான் மது அருந்துவது கிடையாது. அதனால் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று கூறமுடியாது. மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரை மதுக்கடைகள் இருக்கும்  இல்லையென்றால், கள்ளச்சாராயம் தான் பெருகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உலகம் முழுவதும் மதுக்கடைகள் திறந்தாலும் மதுவுக்கு எதிராக அறிவுரைகள் தீமைகள் குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். புகை பிடித்தால் உடல் நலத்திற்கு தீங்கு புற்றுநோய் வரும் என்ற பிரச்சாரத்தின் மூலம் தற்போது புகை பிடிக்கும் பழக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல் தான் மதுவுக்கு எதிராக தமிழக அரசு அதிக அளவில் பணத்தை செலவு செய்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    Also read: ‘பிரதமர் மோடி குறித்து திமுகவினர் மட்டும் பொய் பேசலாமா?’: கிஷோர் கே.சாமி கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

    பள்ளி, கல்லூரிகளில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறவேண்டும். மதுக்கடைகளை மூடுவது வழியல்ல கள்ளச்சாராயம் ஆறாக ஓடும். காங்கிரஸ் கட்சிக்கு மதுக்கடையை திறந்தது உடன்பாடு கிடையாது. இருந்தாலும் அரசு என்ன செய்யும். பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் எச்.ராஜா அனைத்து மதுபானக் கடைகளையும் மூட சொல்லட்டும், பிறகு தமிழகம் குறித்து பேசட்டும். டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தினலே கட்டுமான பொருட்களின் விலை உயர்வு குறைந்துவிடும் என்று அவர் கூறினார்.

    செய்தியாளர் -  முத்துராமலிங்கம்
    Published by:Esakki Raja
    First published: