• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பமானது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பமானது

உலக புகழ் பெற்ற அலங்காநல்லுர் போட்டியில் பங்கேற்பதற்காக 1,400 காளைகள் பதிவு செய்துள்ளன. முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசுகள் வழங்கப்படயுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

காலை 8 மணி முதல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக 1,400 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 848 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வாடிவாசலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்நிலையில், மாவட்டக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே போட்டியில் சிறப்பிடம் பெறும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட இருப்பதாக சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Also see... இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு... புதுக்கோட்டையில் கோலாகலம். 


Also see... திருவள்ளுவருக்கு மரியாதை செய்த வைரமுத்து! 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: