ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்...!

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்...!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

Alanganallur jallikattu 2023 | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காளைகள் சீறிப் பாய, காளையர்கள் அதனை அடக்க முயற்சிக்கும் காட்சிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, அன்பில் மகேஸ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரி ஆகியோர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்தனர். ஜல்லிக்கட்டில் முக்கிய பிரமுகர்களின் வளர்ப்புக் காளைகளும் களமாடி வருகின்றன.

அவனியாபுரம், சூரியூர் ஜல்லிக்கட்டுகளில் களமிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அலங்காநல்லூரிலும் களமிறங்கி வெற்றிபெற்றது. இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் களமிறக்கப்பட்ட காளை வெற்றிபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் காளை களமிறங்கிய நிலையில், யாருக்கும் பிடிகொடுக்காமல் வெற்றிபெற்றது.

நடிகர் சூரியின் சார்பில் 2 மாடுகள் களமிறங்கின. 3வது சுற்றில் களமிறங்கிய சூரியின் காளை பிடிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய காளை வெற்றிபெற்றது. 4 வது சுற்றில் களமிறங்கிய தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் காளை வெற்றி பெற்றது. இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் சார்பில் களமிறக்கப்பட்ட காளையும் வெற்றிபெற்றது.

First published:

Tags: Alanganallur, Jallikattu