• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்... முதல் பரிசை பெறுவதற்காக மோசடி என புகார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்... முதல் பரிசை பெறுவதற்காக மோசடி என புகார்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில் இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகாரை ஒன்றை கொடுத்துள்ளார்.

  • Share this:
    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசான காரை பெறுவதற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக 2-ம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

    தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டிலும் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16-ம் தேதி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை தழுவும் வீரருக்கு முதல் பரிசா கார் வழங்கப்படும். அதேப் போன்று முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளர்க்கு பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது.

    இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை தழுவிய கண்ணன் என்ற வீரருக்க முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கருப்பண்ணன் என்பவருக்கு 2 நாட்டுக்கறவை மாடுகள் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அலங்காநல்லூரில் இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகாரை ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது. முதல் சுற்றில் 5 மாடுகளை பிடித்த வேறொரு வீரரின் பனியனை அணிந்து முதல் பரிசு பெற்ற கண்ணன் களமாடியதாக புகார் அளித்துள்ளார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து பரிசு பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: