காரை விற்க மாட்டேன்... அடுத்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கவும் மாட்டேன்...! 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் சொல்கிறார்

Jallikattu |

காரை விற்க மாட்டேன்... அடுத்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கவும் மாட்டேன்...! 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் சொல்கிறார்
ரஞ்சித் குமார்
  • News18
  • Last Updated: January 17, 2020, 9:51 PM IST
  • Share this:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாரின், சகோதரர் ராம் குமார் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்து கார் பரிசாக வென்றவர் ஆவார்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று கோலாகலமாக நடந்தது. இதில், மொத்தம் 739 காளைகள் களமிறங்கியுள்ளன. 688 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை அடக்க முயன்றுள்ளனர்.

காளைகள் தாக்கியதில் 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளையின் உரிமையாளர் ஒருவர் மற்றொரு காளை தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ஒருவரும் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.


Read: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் சோக சம்பவம் - காளை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு 

மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், புள்ளிகளின் அடிப்படையில் டாப் இடத்தைப் பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் அறிவிக்கப்பட்டன.

மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ அணுராதாவின் காளை இரண்டாம் இடமும், ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளை மூன்றாமிடமும் பிடித்தது.16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடமும், 14 காளைகளை அடக்கிய ஆழகர்கோவில் கார்த்திக் இரண்டாம் இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

முதலிடத்திலும் ரஞ்சித் குமார் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒரே சுற்றில் 16 காளைகளை இதுவரை யாரும் அடக்கியது இல்லை.

முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக வழங்கப்பட்டன. கார் பரிசை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஞ்சித் குமாருக்கு வழங்க இருக்கிறார்.

சுவாரஸ்யம் என்னவென்றால், ரஞ்சித் குமாரின் சகோதரர் ராம் குமார் கடந்தாண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து கார் பரிசாக பெற்றிருந்தார். ஆனால், குடும்ப வறுகை காரணமாக காரை அவர் விற்றார்.

ராம் குமார் காரை பரிசாக பெற்ற புகைப்படம்


தற்போது, ரஞ்சித் குமாரும் காரை பரிசாக வென்ற நிலையில், அதுவும் விற்பனைக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், “பரிசாக கிடைக்கும் காரை விற்கப் போவதில்லை, அடுத்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கப் போவதும் இல்லை” என்று ரஞ்சித் குமார் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பெற்ற காரை வீட்டில் நிறுத்த இடமில்லாததாலும் வறுமை காரணமாகவும் காரை விற்றுவிட்டதாகவும், இந்த ஆண்டு பரிசாக கிடைத்த காரை விற்க மாட்டேன். முதல்வரின் கையால் பரிசு வாங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்று ரஞ்சித் குமாரின் தந்தை கண்ணன் கூறியுள்ளார்.

காரை பரிசாக அளிப்பதால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை அதற்குப் பதிலாக ஜல்லிக்கட்டில்  முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு அரசு வேலை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுகின்றன.

வறுமையால் விற்பனையாகும் பரிசுப் பொருட்கள்...! மாடுபிடி வீரர்களின் சோகமான மறுபக்கம் - வீடியோ கீழேAlso See...

First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading