ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. தொடங்கிவைத்த உதயநிதி.. அருகே அன்பில் மகேஸ், நடிகர் சூரி..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. தொடங்கிவைத்த உதயநிதி.. அருகே அன்பில் மகேஸ், நடிகர் சூரி..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

Alanganallur jallikattu 2023 | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டின் தொடக்கமாக முதலில் முனியாண்டி சாமி காளை படி அவிழ்க்கப்பட்டது. பாரம்பரிய வழக்கப்படி அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து முதல் சுற்று போட்டிகள் ஆரம்பமான நிலையில், காளைகள் சீறி பாய்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 25 மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

ஜல்லிகட்டு போட்டியை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், மூர்த்தி , பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் விழா மேடையில் இருந்து ஜல்லிகட்டு நிகழ்வை கண்டு ரசித்து வருகிறார்கள். நிகழ்வை உதயநிதியோடு நடிகர் சூரியும் இணைந்து கண்டுகளித்து வருகிறார்.

First published:

Tags: Alanganallur, Jallikattu