Alanganallur Jallikattu Live: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Alanganallur Jallikattu Live: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் அதிக காளைகளை அடக்கி முதலாவது இடம் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

  • Share this:
    மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சற்றுமுன் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியை கொடியசைத்து  தொடங்கி வைத்தனர்.

    இந்தப் போட்டியில், 700 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடக்குவதற்காக 655 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.



    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வாடிவாசல் முதல் பார்வையாளர்கள் மேடை வரையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகையையொட்டி அலங்காநல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் அதிக காளைகளை அடக்கி முதலாவது இடம் பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Yuvaraj V
    First published: