மு.க.அழகிரியின் பலம் தேர்தலின்போது தான் தெரியும் - செல்லூர் ராஜு

மு.க.அழகிரியின் பலம் தேர்தலின்போது தான் தெரியும் - செல்லூர் ராஜு
செல்லூர் ராஜூ
  • News18
  • Last Updated: September 9, 2018, 4:39 PM IST
  • Share this:
'மு.க.அழகிரியின் பலம் தேர்தலின்போது தான் தெரியும்’ என்று மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, ``மு.க.அழகிரி திமுகவில் பல வருடங்களாக எந்த பொறுப்பிலும் இல்லை. எனினும் அவருடைய தந்தையும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி அமைதி பேரணி நடத்தினார்.

இது, அவருக்கு பல்வேறு மாவட்டங்களில் இன்னும் ஆதரவு இருப்பதைக் காட்டுகிறது. உண்மையில், அவருடைய பலம் தேர்தலின்போது தான் தெரியும்.


திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சென்றமுறை இடைத்தேர்தல் நடந்தபோது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தார். அப்போதே 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. தற்சமயம், இடைத்தேர்தல் வந்தால் அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

தேர்தல் களத்தில் எத்தனை வேட்பாளர்கள் உள்ளார்கள் என்பது பிரச்னை அல்ல. இரட்டை இலை சின்னம் எங்களிடம் உள்ளதால் அதிமுக வெற்றி பெறுவது உறுதி’’ என்றார் செல்லூர் ராஜூ.
First published: September 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading