ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தி.மு.கவை விமர்சித்து அறிக்கை! விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தி.மு.கவை விமர்சித்து அறிக்கை! விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க மீதான வருத்தம் அறிக்கையோடு முடிந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூட்டணியில் விரிசல் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக தி.மு.க செயல்பட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். ஒரு மாவட்ட பதவியோ, துணைத் தலைவர் பதவியோ தங்களுக்கு, திமுக வழங்கவில்லை என்றும், அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்த இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். காங்கிரசுக்கு தி.மு.க போதிய இடம் ஒதுக்காதது வேதனை அளிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் கூறியிருந்தார்.

  இதனால், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘தங்களின் வருத்தம் அறிக்கையோடு முடிந்துவிட்டது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வெறுமனே தேர்தல் கூட்டணி அல்ல. ஒரு கொள்கை கூட்டணி. இந்திய அளவில் ஜனநாயகத்தைக் காப்பதற்கான கூட்டணி’ என்று விளக்கமளித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: K.S.Alagiri