அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் அட்சயபாத்திரா!

சென்னையில் 3 மாநகராட்சி பள்ளிகளில் காலையில் கிடைக்கும் பொங்கல், பூரி போன்ற சிற்றுண்டிக்காகவே குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வத்துடன் ஓடோடி வருவதாகவும், பாடங்களை தெம்பாக பயில்வதாகவும் பூரிப்புடன் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியை மரியசாந்தி கூறுகிறார்.

Web Desk | news18
Updated: March 14, 2019, 10:22 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் அட்சயபாத்திரா!
காலை உணவு அருந்தும் அரசு பள்ளி மாணவிகள்
Web Desk | news18
Updated: March 14, 2019, 10:22 AM IST
வறுமையின் பிடியில் இருக்கும் சாமானியர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே பெரும் சாதனை. அவர்களில் பலருக்கு முழுவயிறு காலை உணவு என்பது பெரும் கனவு. மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் அத்தகைய குழந்தைகளை மல்லிப்பூ இட்லி, கமகமக்கும் சாம்பார் என ருசியான உணவுடன் அட்சயபாத்திரா காலைநேரங்களில் பசியாற்றி வருகிறது.

நாடு முழுவதும் 14 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்கும் அட்சயபாத்திரா அமைப்பு, தமிழகத்திலும் அதை செயல்படுத்த முயன்றபோது அனுமதி கிட்டாததால் ஆளுநர் மாளிகையின் கதவைத் தட்டியது. அப்போது உதித்தது மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்.

சென்னையில் 3 மாநகராட்சி பள்ளிகளில் காலையில் கிடைக்கும் பொங்கல், பூரி போன்ற சிற்றுண்டிக்காகவே குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வத்துடன் ஓடோடி வருவதாகவும், பாடங்களை தெம்பாக பயில்வதாகவும் பூரிப்புடன் மாநகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியை மரியசாந்தி கூறுகிறார்.

அதிகாலையிலேயே கூலிவேலைக்கு கிளம்பிவிடும் வீடற்ற தொழிலாளர்களின் குழந்தைகளே இத்திட்டத்தால் பெரிதும் பயனடைவதாக மரியசாந்தி கூறுகிறார்.

காலையில் முழுவயிறு உணவு உண்ண முடிவதால் சக மாணவ-மாணவியர் தெம்புடன் காணப்படுவதாக பசியாறிய களிப்பில் சரண்யா கூறுகிறார்

மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் பெரும்சுமையை குறைத்திருப்பதாகக் பெற்றோர் கூறுகின்றனர்.

காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட காரணமாக இருந்த ஆளுநர் அலுவலகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், இதை ஒரு லட்சம் குழந்தைகளுக்கு செயல்படுத்தவுள்ளதாகக் கூறுகிறார்.
Loading...
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைத்த மாநகராட்சிப்பள்ளிக்கு நன்றி கூறும் அட்சயபாத்திரா அமைப்பினர், பல்வேறு பள்ளிகளுக்கு அதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒரு நாளில் காலை உணவே அதிமுக்கிய உணவு என்பதால், இச்சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூறுகின்றனர்.

Also see... மோடியின் அழைப்பை ஏற்ற ஏ.ஆர்.ரகுமான்!
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...