மனைவியின் தங்கையை திருமணம் செய்ய ஆசைபட்ட நபர்: கத்தியால் குத்திய காதலர்

வேலூர் அருகே மனைவியின் தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா கணவரை காதலர் கத்தியால் குத்தியுள்ளார்.

  • Share this:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வீ. டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகள் சாமுண்டீஸ்வரி. திருப்பதியைச் சேர்ந்த துரைபாபு உடன் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை.

கொரோனா ஊரடங்கால் துரைபாபு தனது மனைவியோடு வீ.டி.பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டில் வந்து மூன்று மாதங்களாக தங்கியுள்ளார். குழந்தை இல்லாத நிலையில், மனைவியின் தங்கையான 19 வயதான பார்வதியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள துரைபாபுவிற்கு ஆசை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பார்வதி பரதராமி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பூவரசன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோரும், அக்கா கணவரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இதுசம்பந்தமாக பூவரசனை நேரில் சந்தித்து துரைபாபு பலமுறை எச்சரித்து உள்ளார். பார்வதியிடம் உங்கள் இருவரையும் நான் ஒன்றாக சேர விட மாட்டேன். உங்களைக் கொலை செய்துவிடுவேன் என்று கூறி துரைபாபு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பூவரசனிடம் பார்வதி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பூவரசன் நண்பர்களுடன் சென்று துரைபாபுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைபாபுவின் வயிற்றில் பூவரசன் சரமாரியாக குத்தியுள்ளார். மயங்கி விழுந்த துரைபாபுவை ஆபத்தான நிலையில் உறவினர்கள் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading