• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிசிடிவி காட்சிகள் மூலம் 76% குற்றவாளிகள் கண்டுபிடிப்பு! சென்னை காவல் ஆணையாளர் தகவல்

சிசிடிவி காட்சிகள் மூலம் 76% குற்றவாளிகள் கண்டுபிடிப்பு! சென்னை காவல் ஆணையாளர் தகவல்

எ.கே.விஸ்வநாதன்

எ.கே.விஸ்வநாதன்

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் சிசிடிவி காட்சிகள் மூலம் வழிப்பறி, விபத்து உள்ளிட்ட வழக்குகளில்  76 சதவீதம்  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நந்தனம் சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள் என மொத்தம் 9 ANPR சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்றது.

இதில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு 3 இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25,000 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த ஐயப்பாடு விலகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் (Hit and Run Cases) உள்ளிட்ட வழக்குகளில் 76% போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது பொருத்தப்பட்டுள்ள ANPR சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் ஒரு வாகனத்தின் எண் தட்டை வைத்து அந்த வாகனம் எந்த நேரத்தில் எந்த சாலையை கடந்துள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும், இதன் மூலம் குற்றம் செய்துவிட்டு தப்பித்து செல்ல முயல்பவர்களை ளிதில் பிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: