MBBS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, 2ஆவது முறையாக மீண்டும் அனுப்பிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து நியூஸ் 18-க்கு தகவல் தெரிவித்த அவர், நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர சட்ட ரீதியிலான தடை இல்லை எனவும், குறிப்பிட்ட ஒரு மாநிலம் மட்டும் விலக்கு கேட்கக் கூடாது என்ற வாதம் சரியானது இல்லை எனவும் தெரிவித்தார்.
Must Read : தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை
மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் முன் ஜாமின் வழங்க பயன்படும் 438 CrPC பிரிவு பயன்பாட்டில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியல் சாசன சட்ட விதி 254 (2)ன் கீழ் விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.