Home /News /tamil-nadu /

வேடசந்தூரில் தொழிலதிபர் எரித்துக்கொன்ற வழக்கு.. 3வது குற்றவாளிக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

வேடசந்தூரில் தொழிலதிபர் எரித்துக்கொன்ற வழக்கு.. 3வது குற்றவாளிக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Dindigul : வேடசந்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணி கொலை வழக்கில், 3 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அஜித் என்பவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணி கொலை வழக்கில், 3 வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு உள்ள அஜித் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், நத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தொழிலதிபர் பாலசுப்பிரமணி (வயது 45).  இவர் வேடசந்தூரில் நிதி நிறுவனம் மற்றும் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். சம்பவத்தன்று வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், கூட்டம் நிறைவு பெற்றதும் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.

    இந்நிலையில், நத்தம்பட்டி பகுதியில் இருக்கும் மண் சாலையில் பாலசுப்பிரமணி தலையில் பலத்த காயத்துடன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து  கூம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் உள்ள அஜித் என்பவர்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

    அபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்,  10.03.2022 இரவு 7.00 மணியளவில்,  லயன்ஸ் கிளப் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாலசுப்பிரமணி வேடசந்தூர் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. முன்விரோதம் காரணமாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சேர்ந்து சதி செய்து, இறந்தவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. என வாதிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மனுதாரர் அஜித் தரப்பு வழக்கறிஞர்,  சக குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை . மனுதாரர் 12.03.2022 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார் என்றார்.

    இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டும், சிறையில் இருந்த காலத்தைக் கருத்தில் கொண்டும், இணை குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரர் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    Must Read : கஞ்சா போதையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. தாய் மகளுக்கு கொலை மிரட்டல் - கன்னியாகுமரியில் நடந்த கொடூரம்

    எனவே, மனுதாரருக்கு மட்டும் ஜாமீன் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளுக்கு இந்த ஜாமீன் உத்தரவு  பொருந்தாது. மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் கூம்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும். உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    செய்தியாளர் - கருணாகரன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bail, Dindigul, Madurai High Court, Murder case

    அடுத்த செய்தி