மதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்

மதுரை போஸ்டர் கைது விவகாரத்தில் விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டதிற்கு, முதன் முறையாக அஜித் ரசிகர்களும் ஆதரவாக தோள் கொடுத்துள்ளனர்

Web Desk | news18-tamil
Updated: September 17, 2019, 11:05 PM IST
மதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர் கைது
Web Desk | news18-tamil
Updated: September 17, 2019, 11:05 PM IST
மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரைக் கைது செய்துள்ளனர். போஸ்டர் ஒட்டியது குற்றமா? என இந்த விஷயத்தில் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையி்ல் கடந்த 12-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்ததால் நிலைதடுமாறி சாலையில் விழ பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழத்தையே அதிரச் செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மதுரையில் வித்தியாசமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாலையில் செல்வோரின் கவனத்தை சிதறடித்த குற்றத்திற்காக விஜய் ரசிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவரைக் கைதும் செய்துள்ளனர்.


மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேனர், போஸ்டர் விளம்பரங்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உள்ள சுவர்களில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு  உரிய அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.இதையடுத்து, போக்குவரத்து பாதைகளில் கவனத்தை திசைதிருப்பியதாகவும், பொது இடத்தின் அழகை சீர்குலைத்ததாகவும் கூறி, தமிழக பொதுவெளி சட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றப் பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகி ஜெயகார்த்திக் ஆகியோர் மீது செல்லுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயகார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

Loading...

இந்தச் சூழலில், பேனர்கள் வைக்கக் கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்கும் தங்களுக்கு, போஸ்டர்கள் மூலம் கூட உணர்வை வெளிப்படுத்தக் கூடாது என தடை விதித்தால் என்ன தான் செய்வது என வேதனை தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

வழக்கமாக, விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் எலியும் பூனையும் போல் இருப்பார்கள். போஸ்டர் அடிப்பதில் தொடங்கி, டிவிட்டரில் டிரெண்டு செய்வது வரை இருவருக்குள்ளும் கடுமையான போட்டி இருக்கும். ஆனால், மதுரை போஸ்டர் கைது விவகாரத்தில் விஜய் ரசிகர் கைது செய்யப்பட்டதிற்கு, முதன் முறையாக அஜித் ரசிகர்களும் ஆதரவாக தோள் கொடுத்துள்ளனர்

ரசிகர்களுக்கு நிலவும் ஒற்றுமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், போஸ்டர் ஒட்டுவதற்கும் அனுமதி வாங்கவேண்டுமா? புதிய நடைமுறையாக இருக்கிறதே என்று செல்லூர் போலீசாரிடம் கேட்டபோது, தமிழக பொதுவெளி அழகை சீர்குலைப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முடித்துக் கொண்டனர். விஜய் ரசிகர் கைது ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தலும், அஜித்-விஜய் ரசிகர்களுக்கு ஒற்றுமை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

Also Watch: தல vs தளபதி

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...