அஜித்குமார் நடிக்கும், இன்னும் பெயரிடப்படாத, AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை, மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில், யூடியூப் சானல் ஒன்றிற்கு பேட்டியளித்த போனிகபூர், "வரும்
தீபாவளியன்று அஜித்குமார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக" கூறியுள்ளார்.
இதனால் உற்சாமடைந்துள்ள திருச்சி அஜித்குமார் ரசிகர்கள், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பாணியில், "செய்வீர்களா.. சொன்னதை செய்வீர்களா..?" என்று போனிகபூருக்கு கேள்வி எழுப்பி அஜித் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Also Read : ஒரே நிகழ்ச்சிக்கு வருகை தரப்போகும் அஜித் – விஜய்? கோலிவுட்டில் பரபரப்பு
மேலும், "திரு. போனிகபூர் அவர்களே.. இம்முறை 2022 (தல) தீபாவளி கொண்டாட்டத்திற்கு உங்கள் விரல் அசைவிற்காக காத்திருக்கிறோம். இப்படிக்கு, தன்னைத்தானே செதுக்கியவன் அஜித் நற்பணி இயக்கம், திருச்சி" என்று போனிகபூர் படங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

வைரலாகும் போஸ்டர்
திருச்சி மாநகரத்தின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுத்து வருகிறது. தீபாவளியன்று அஜித்குமார் படம் வெளியாக வேண்டும்' என்ற பேராசையின் வெளிப்பாடே இந்த போஸ்டர்கள் என்று தெரியவருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.