உள்ளாட்சித் தேர்தலுக்காக உதயமானது அஜித் திமுக - அரசியலில் அடுத்த பரபரப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்காக உதயமானது அஜித் திமுக - அரசியலில் அடுத்த பரபரப்பு!
  • Share this:
அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயருடன் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து இப்போதிருந்தே உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைப் பெறுவது, கூட்டணியை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.


இந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அதிமுகவை அஜித் திமுக என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசியல் குறித்து முதன்முறையாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் அஜித், “எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு” என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு நேர்மாறாக அஜித் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


 

 
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading