ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்பு!

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்பு!

 ஏர்டெல், வோடாஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றை பார்த்து இன்னொன்று தனது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

ஏர்டெல், வோடாஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றை பார்த்து இன்னொன்று தனது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

ஏர்டெல், வோடாஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றை பார்த்து இன்னொன்று தனது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

  • 2 minute read
  • Last Updated :

கடந்த சில ஆண்டுகளாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வந்த சேவைகளுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அதிலும் முக்கியமாக ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றை பார்த்து இன்னொன்று தனது சேவை கட்டணத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி, புதிய கட்டண அட்டவணையை வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

அந்த வகையில் இந்த கட்டண உயர்வானது நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, வோடாஃபோன் நிறுவனமும் தனது சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி புதிய கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 25 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. மூன்றாவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் நவம்பர் 28 ஆம் தேதி தனது பிரீபெயிட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

இப்படியொரு அறிவிப்பை முக்கியமான மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வெளியிட்டதால் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த புதிய கட்டண உயர்வானது, குறைந்தபட்சம் 16 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது சராசரியாக 20% முதல் 22% வரையிலான கட்டண உயர்வாகும். இந்த அறிவிப்பை குறித்து வாடிக்கையாளர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) ஏராளாமானோர் புகார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ |  ஆண்டுக்கு ரூ.12 போதும்... அரசு வழங்கும் ரூ.2 லட்சத்தை எப்படி பெறலாம் தெரியுமா?

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் மீது அதிக அளவிலான புகார்கள் வந்துள்ளது. 2021 ஆண்டில் இதுவரையில், ஏர்டெல்லுக்கு எதிராக 16,111 சேவை தொடர்பான புகார்களைப் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு எதிராக 14,487 புகார்களும் வந்துள்ளன. மேலும் எம்டிஎன்எல் மீது 732 புகார்களும், பிஎஸ்என்எல் மீது 2,913 புகார்களும் இதுவரை வந்துள்ளன.

டிராய் சட்டம், 1997-இன் படி, தனிநபர் நுகர்வோர் புகார்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (டிராய்) கையாள்வதில்லை என்று சவுகான் கூறியுள்ளார். "இருப்பினும், டிராய்-இல் பெறப்படும் புகார்கள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். மேலும் நுகர்வோர் புகார்களைக் கையாள்வதற்காக இரண்டு அடுக்கு புகார் தீர்க்கும் முறை அல்லது குறைகளைத் தீர்க்கும் முறையை நிறுவ அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களையும் டிராய் கட்டாயப்படுத்தியுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ |  சொந்தமாக பிஸினஸ் தொடங்க ஆசையா? ஐசிஐசிஐ வங்கி ரூ. 25 லட்சம் வரை கடன் தர்றாங்க தெரியுமா?

இந்த வழிமுறையின்படி, எந்த ஒரு நுகர்வோரும் தங்கள் தொலைத்தொடர்பு சேவை நிறுவங்களின் மீது புகார் மையத்தில் அவர்களின் சேவை தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இந்த புகார்கள் சரியாக தீர்க்கப்படவில்லை என்றால், தொலைத்தொடர்பு சேவை நிறுவங்களின் மீது மேல்முறையீடு பதிவு செய்யலாம் என்று இணை அமைச்சர் சவுகான் வெள்ளிக்கிழமை நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

First published: