ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இனி விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை... தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

இனி விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை... தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருமல்,காய்ச்சல்,தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க: சுத்திட்டு வருது சக்கரம்.. தமிழகத்தில் மீண்டும் மழை.. அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Corona, Covid-19