Home /News /tamil-nadu /

சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு

  • Last Updated :
டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்றில் தீங்கு ஏற்படுத்தும் நுண்துகள்களின் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது மனிதன் சுவாசிக்கும் காற்றின் தரக்குறியீடு 100 புள்ளிகள் வரை இருக்க வேண்டும்.

ஆனால் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, காற்றின் தரக்குறியீடு மணலியில் 290, கொடுங்கையூரில் 319, அண்ணாநகரில் 301, ஆலந்தூரில் 218, வேளச்சேரியில் 252, அமெரிக்க தூதரகத்தில் 165 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் தாக்கம் தான் சென்னையில் எதிரொலிப்பதாக பல்வேறு தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இது வெறும் பனிப்புகைதான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இது போன்று காற்று மாசு ஏற்படும் நேரங்களில் அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது.

அதாவது, அதிகாலை நேரத்திலும், சூரியன் மறைந்த பிறகான மாலை நேரத்திலும் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது.

இருமல், தலைவலி, மூச்சு திணறல் ஏற்பட்டால் செய்யும் வேலையை உடனடியாக நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்

வீடு மற்றும் வேலையிடங்களில் உள்ள ஜன்னல் கதவுகளை அடைத்து வைக்க வேண்டும்

வீட்டை சுத்தம் செய்யும் போது தூசு பறக்காதபடி ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

விறகு மற்றும் மெழுகுவர்த்தி எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் இருப்போர் மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
Published by:Yuvaraj V
First published:

Tags: Air pollution

அடுத்த செய்தி