Home /News /tamil-nadu /

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழுவை அமைத்தது எய்ம்ஸ்

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழுவை அமைத்தது எய்ம்ஸ்

ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

Arumugasamy Commission : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழுவை எய்ம்ஸ் அமைத்துள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இந்நிலையில், ஆணையத்தின் விசாரணையின் போது உடன் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவர்களின் பெயர்களை விரைவில் பரிந்துரைக்குமாறு எய்ம்ஸ் இயக்குனருக்கு சில தினங்கள் முன்பாக ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

    அதன் தொடர்ச்சியாக எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள் ஆவர்.

    Must Read : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவர்கள் தமிழகம் வந்தனர்

    மருத்துவக்குழுவை அமைத்துள்ள நிலையில், ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் ஆறுமுகசாமி வரும் 16 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: AIIMS, Arumugasamy commission, Jayalalithaa

    அடுத்த செய்தி