மதுரையில் 45 மாதங்களில் எய்ம்ஸ் - மத்திய அரசு பதில்

மருத்துவமனை கட்டுமானத்திற்காக மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியானது. இதனால், கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலை இருந்து வந்தது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 11:53 AM IST
மதுரையில் 45 மாதங்களில் எய்ம்ஸ் - மத்திய அரசு பதில்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: December 6, 2018, 11:53 AM IST
மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட 45 மாதங்களில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மருத்துவமனை கட்டுமானத்திற்காக மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியானது. இதனால், மருத்துமனைக்கான கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலை இருந்து வந்தது.

இது தொடர்பான வழக்கை கடந்த முறை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்பட்ட 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்