தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை - கைவிரித்த AICTE

சென்னை உயர்நீதிமன்றம்.

சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வராது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனியார் பள்ளி, கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்காததால், 50 சதவீத லாபம், பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்கு செல்வதாகவும், தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்த கட்டணச்சலுகையும் வழங்கப்படுவதில்லை எனவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், டீ கடை போன்ற தொழில்களில் அவர்கள் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also read... ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவுசெய்யக்கோரிய வழக்கு.. இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமாறு நீதிமன்றம் பரிந்துரை..மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் தங்கள் பணி ஏதும் இல்லை என்றும் இதுதொடர்பாக விரிவான பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்படது. இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: