Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றி யாருக்கு.. உச்சகட்ட பரபரப்பில் ஓபிஎஸ் - இபிஎஸ்.. சற்று நேரத்தில் தீர்ப்பு..

அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றி யாருக்கு.. உச்சகட்ட பரபரப்பில் ஓபிஎஸ் - இபிஎஸ்.. சற்று நேரத்தில் தீர்ப்பு..

ஒபிஎஸ் - இபிஎஸ் / அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு

ஒபிஎஸ் - இபிஎஸ் / அதிமுக பொதுக்குழு மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு

ADMK Crisis | அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இன்று, காலை சரியாக 10.30 மணி தீர்ப்பு  வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, கடந்த  ஜூலை 11-ஆம் தேதியன்று சென்னையை அடுத்த வானகரகத்தில் அஇஅதிமுக-வின் பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜுலை 11 தேதியன்று காலை, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, ஓ பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மேலும், கட்சியின் சட்டத்திட்டங்களை மாற்றி அமைக்கும் உரிமை கட்சியின் பொதுக்குழுவுக்கே  உள்ளது என்றும் தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து, நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில்,கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற விதம் குறித்தும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இதையும் வாசிக்க: Exclusive : இபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற தயார் - ஓ.பன்னீர்செல்வம் சூசகம்

    இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கொண்ட தனிநீதிபதி அமர்வு, "ஜூலை 11ம் தேதி நடைபெற்ற கட்சியின்  பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்கும்"  என்றும் தெரிவித்தார். மேலும்,  கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருணைப்பாளர் இருவரும் புதிய பொதுக்குழுவை  நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்கடிடிவி தினகரன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..

    இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கின், தீர்ப்பு  இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இன்றைய வழக்கின் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
    Published by:Salanraj R
    First published:

    Tags: ADMK, Madras High court, OPS - EPS

    அடுத்த செய்தி