Home /News /tamil-nadu /

அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்- பொள்ளாச்சி ஜெயராமன்

அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்- பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

அண்ட புளுகு, ஆகாச புளுகு, கருணாநிதி சொன்ன புளுகுகளை வைத்து ஆட்சிக்கு ஸ்டாலின் வந்துள்ளார் என்று பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், அடுத்த  10 அமாவாசைகளுக்குள் எதிரிகளை வீழ்த்தி , அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என ஆருடம் கூறினார்.

அடுத்த  10 அமாவாசைகளுக்குள் எதிரிகளை வீழ்த்தி, அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் பொள்ளாச்சி எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  செயல் வீரர் கூட்டத்திற்காக ஏராளமான அதிமுகவினர் கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு இருந்த வாகனங்களை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் முயன்ற போது காவல் துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது எனவும், பறிமுதல் செய்யும் வாகனத்தை அப்புறபடுத்த வேண்டும் என கூறி காவல் துறையை கண்டித்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்றார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண் குமார்,  அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் ஒருமையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். மேலும், அதிமுகவிற்கு கோவைதான் தலைநகரம் என்று இருக்கும் படி 9 ம் தேதி நடக்கும்  ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி


இதனைதொடர்ந்து பேசிய அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன், இந்த ஆட்சி அதிகபட்சம் 10 அமாவாசையில் பஞ்சராகிவிடும் என தெரிவித்தார். அண்ட புளுகு, ஆகாச புளுகு, கருணாநிதி சொன்ன புளுகுகளை வைத்து ஆட்சிக்கு ஸ்டாலின் வந்துள்ளார் என கடுமையாக பேசிய அவர், 6 மாதம் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கோவை குலுங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிங்க: ரஜினிகாந்த்துடன் சசிகலா திடீர் சந்திப்பு


ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் ஒரு குப்பை என தெரிவித்த அவர், அதிமுக தொண்டர்கள் அடி வாங்குவதிலும் விண்ணை தொடுவான், அடிப்பதிலும் வானை தொடுவான் பேசினார்.  தொண்டர்கள் சிலிர்த்தெழுந்தால் தாங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.எந்த ஊரில் இருந்து எலி, பெருக்கான் வந்தாலும் கவலையில்லை என பேசிய அவர் அதிமுகவில் இருந்து ஓடி ஒளிந்தவன் எவனும் வரலாற்றில் நிலைத்ததில்லை  எனவும் தெரிவித்தார். அடுத்த  10 அமாவாசைகளுக்குள் எதிரிகளை வீழ்த்தி , அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என ஆருடம் சொன்ன அவர்,  எந்த சோதனை  எஸ்.பி.வேலுமணிக்கு வந்தாலும் அதை தவிடுபொடியாக்குவோம் எனவும்  கூறினார்.
Published by:Murugesh M
First published:

Tags: ADMK, AIADMK

அடுத்த செய்தி