சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை மீண்டும் அவரிடமே சென்றுவிடும் - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் யார் வேண்டுமென்றாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரம் தொடங்கலாம். ஆனால் அதிமுக, திமுகவிற்கு மட்டும்தான் போட்டி என்றும் கூறினார்.

 • Share this:
  சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை அவரிடம் சென்றுவிடும் என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ரஜினியின் செயல்பாடுகள் அனைத்தும் சமீபகாலமாக பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளன. முழுக்கமுழுக்க பாஜகவின் பின்னணியில் ரஜினி செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என்றார்.

  மேலும் கூறுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமென்றாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரம் தொடங்கலாம். ஆனால் அதிமுக, திமுகவிற்கு மட்டும்தான் போட்டி. மற்றவர்கள் யாரையும் அரசியல் களத்தில் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் சில வாக்குகளை வேண்டுமானால் பிரிக்கலாம் என்றார்.

  தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் புதிதாக அரசியல் கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தற்போது தொகுதி எந்தக் கட்சி கையில் உள்ளதோ அவர்களுக்கு மீண்டும் அந்தத் தொகுதியை ஒதுக்க வாய்ப்புள்ளது. சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை மீண்டும் அவரிடமே சென்றுவிடும். அவர் தேர்தலில் நிற்க முடியாவிட்டால் பொறுப்புகள் அனைத்தும் டிடிவி தினகரன் வசம் சென்றுவிடும் என்று தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: