• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுகவின் வெள்ளை அறிக்கையை ஒற்றை மீமில் கலாய்த்த அதிமுக!

திமுகவின் வெள்ளை அறிக்கையை ஒற்றை மீமில் கலாய்த்த அதிமுக!

வெள்ளை அறிக்கையை கலாய்த்த அதிமுக

வெள்ளை அறிக்கையை கலாய்த்த அதிமுக

திமுக அரசின் வெள்ளை அறிக்கையை கிண்டல் அடித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மீம் ஒன்று பகிரப்பட்டிருக்கிறது.

  • Share this:
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையை விளக்கும் வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட நிலையில், வெள்ளை அறிக்கையை கிண்டல் செய்து வீடியோ மீம் மூலமாக அதிமுக கலாய்த்திருக்கிறது.

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமையை விளக்கும், வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ளார்.

வெள்ளை அறிக்கையின்படி, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முறைகேடு, தவறு, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Also Read:  மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இணைந்த மின்சார பேருந்துகள் – குஷியில் பயணிகள்!

வெள்ளை அறிக்கையை கலாய்த்த அதிமுக!


தொடர்ந்து பேசிய அவர், கடந்து 5 ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக இருக்கிறது, தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. இந்த நிலை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

கடந்த அரசு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட கடன் வாங்கியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தின் வருவாய் பெரிதாக சரிந்துள்ளது, இந்த நீண்ட கால சரிவு தமிழக பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளது. 2006 முதல் 11 வரை மாநிலத்தின் வருவாய் உபரியாக இருந்தது, 2013 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வந்தது என தெரிவித்தார்.



இந்தியாவில் எந்த பெரிய மாநிலமும் இந்த அளவிற்கு சரியவில்லை. வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என அவர் தெரிவித்தார்.

Also Read: சகோதர பாசம்னா இதுதான்.. திகைக்க வைத்த 10 வயது சிறுவன்…

வெள்ளை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிமுக அரசு அதிக செலவு செய்தது, 2011ம் ஆண்டு திமுக தோல்வியடைந்து ஆட்சியில் இருந்து சென்ற போது 1.14 லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் கடன் பெற்றுத் தான் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார்.

இதனிடையே திமுக அரசின் வெள்ளை அறிக்கையை கிண்டல் அடித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மீம் ஒன்று பகிரப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழைய சினிமா காட்சி ஒன்றில் எதிரே நடந்து செல்லும் ஒருவரை வழிமறித்து தனது சட்டைப்பையில் இருந்த வெற்றுக் காகிதத்தை எடுத்து அவரிடம் கொடுக்கும் இயக்குனர் சுந்தர்ராஜன், “அது ஒன்னுமில்ல கீழ போட்டுரு” என்கிறார். இதன் மூலம் திமுகவின் வெள்ளை அறிக்கையை ஒன்றுமில்லாத ஒன்று என அதிமுக மறைமுகமாக கலாய்த்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: