தமிழக சட்டமன்றம் கூடியதும், கொடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அதிமுகவினர் மீது தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாகக் கூறினார், தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு சட்டமன்றத்தில் இருந்து கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
கொடநாடு விவகாரத்தில் வேண்டும் என்றே பெரிதாக்கப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமி கூறினார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவினர்,‘பொய் வழக்கு போடாதே, தமிழக மக்களை வஞ்சிக்காதே’ என்று கோஷமிட்டனர்.
அப்போது குறிக்கிட்டுப் பேசிய முதலமைச்சர மு.க.ஸ்டாலின், “நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது. அரசுக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை, விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.” என்று கூறினார்.
இந்நிலையில், ‘பொய் வழக்கு போடாதே’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பிறகு கொடநாடு வீட்டில் சயன் மற்றும் அவரது கூலி படையை சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில், சயன் என்பவரை அழைத்து இரகசிய வாக்கு மூலம் பெற்றதாக செய்தி, செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளது.
இன்றைக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிமுக தலைவர்கள் மீது வழக்கு தொடுத்து அச்சுறுத்த நினைப்பது ஒரு போதும் நடக்காது. அந்த குற்றவாளிகளை காப்பாற்ற திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி உள்ளார்.
ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற போது, திமுக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி உள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கிறார்கள் CRPC 313 ன் பெயரில் சாட்சிகள் விசாரணையின் போது சயன் மறு விசாரணை கோரவில்லை.
Must Read : அதிமுக எம்.எல்.ஏ.விடம் மன்னிப்பு கேட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
வழக்கு நடைபெற்று இறுதி கட்டத்தை அடையும் நிலையில் மறு விசாரணை கோரா நீதிமன்றத்தை அணுக வேண்டும். என்மீதும் அதிமுக வினர் மீதும் வீண் பழிப்போடும் வகையில் ஜோடனை வழக்கை பதிவு செய்கிறார்கள். எத்தகைய சோதனை வந்தாலும் அதிமுக தொண்டர்களை காக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2021 தேர்தலின் போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற முடியாத நிலையில் மக்களை திசை திருப்ப பொய் வழக்கு போடும் முயற்சியை திமுக கையில் எடுத்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.” என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.