அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கரூரில், அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மறுபுறம், அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கடந்த ஒரு மாதமாக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 3- தொகுதிகளில் அதிமுகவும், அரவக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கரூர் சட்டமன்ற தொகுதியில், தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான என். முத்துக்குமார் என்கிற தானேஷ் போட்டியிடுகிறார். (தற்போது உள்ள எம்.எல்.ஏ. கீதாவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு தோகமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் என் .ஆர். சந்திரசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். (கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்).
Must Read : 171 தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திரண்ட அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Election 2021, Karur Constituency, TN Assembly Election 2021