ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூட்டணி கட்சிகள் இல்லாமல் தேர்தல் இன்று பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தும் அதிமுக!

கூட்டணி கட்சிகள் இல்லாமல் தேர்தல் இன்று பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தும் அதிமுக!

அஇஅதிமுக அலுவலகம்

அஇஅதிமுக அலுவலகம்

ஆளும் கட்சியிக இருப்பதால் பிரமாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது அதிமுக.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கூட்டணி கட்சி தலைவர்கள் இல்லாமல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை அதிமுக தொடங்கவுள்ளது.

அதிமுகவின் பிரச்சர பொதுக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு . சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்களை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க அதிமுகவின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மேலும் ஜனவரி 9 ம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தான் தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டு தொடங்கவுள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

பாஜக பொறுத்தவரை ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு, அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்தே பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையே தேமுதிகவும் தங்களுக்கு 40 இடங்களுக்கு மேல் ஒதுக்கும் கட்சியிடன் தான் கூட்டணி என்று உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா என்பதிலும் குழப்பும் நீடிக்கிறது.

Also read... அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக தெரிவித்தாலும், யார் தலைமையில் கூட்டணி என்று இன்னும் இருகட்சியினரும் அறிவிக்கவில்லை. யார் தலைமையில் கூட்டணி,எத்தனை இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எவ்வித கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை.

இதனால் தான் கூட்டணி கட்சி தலைவர்கள் இல்லாமல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியிக இருப்பதால் பிரமாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது அதிமுக.

முதலமைச்சர் பிரச்சாரத்தை தொடங்கினாலும், துணை முதலமைச்சர் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. எனவே கூட்டணி குறித்த சிக்கலை முடித்து பொங்கலுக்கு பின்பு தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: AIADMK, AIADMK Alliance