தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக நல்ல முடிவை அறிவிக்கும்: ஜிகே வாசன் நம்பிக்கை

ஜி.கே.வாசன்

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து, எங்களுடன் பேசி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சென்னை மண்டல மாணவரணி ஆலோசனைக் கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த தமகா கட்சியின் தலைவர் ஜிகே வாசன், ”கூட்டணிக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதும் மாணவர் அணியின் களப்பணியை உறுதிப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். அதிமுக போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் அவர்களது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் மாணவரணியின் செயல்பாடு இருக்கும்” என தெரிவித்தார்.

  மேலும் “18 வயது நிரம்பிய மாணவர்களுடைய வாக்கானது மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். மாணவர்களின் கல்வி வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றும் வகையில் அதிமுக சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்றார்.

  அதனைத் தொடர்ந்து பேசியவர், "அதிமுக அரசின் வெற்றி வாய்ப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தமாகாவை பொறுத்தவரை கடந்த இரண்டு மாத காலமாகவே தேர்தல் கூட்டணியை உடைய களப்பணியை தொடங்கிவிட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பங்கானது கூட்டணி கட்சியின் வெற்றி பெரும் பங்காக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். நாளை தமாகவின் மகளிர் அணியின் கூட்டம் அடையாரில் நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  அதிமுகவுடன் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும். எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதிமுக எங்களுடன் பேசி நல்ல முடிவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். வரும் ஒரு வார காலத்துக்குள் தமாக, அதிமுக கூட்டணி குறித்த தொகுதி பங்கீடு முடிவடையும் என தெரிவித்தார்.

  அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தமாகவிற்கும் அதிமுகவுக்கும் தொகுதி பங்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து கேட்டதற்கு கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து முடிவடைவதற்கு எந்தக் காலக் கெடுவும் கிடையாது.

  திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் அவர்களுடைய வாக்குச் சீட்டின் மூலமாக தக்க பாடம் கொடுப்பார்கள். சசிகலாவின் அறிவிப்பு அவருடைய தனிப்பட்ட அறிவிப்பு. இருந்தாலும் எம்.ஜி.ஆரின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற வார்த்தை உண்மையான அதிமுக தொண்டர்களை வாக்களிக்க தூண்டும்" என்றார்.

  மேலும் படிக்க... எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: